Sunday, September 7, 2008

வாய்த்தல்


மிகவும் தாமதமான நேரம்
சாத்தியங்களின் கதவுகள் சாத்தப்பட்ட
என் தனிமையின் மீது கவ்வுகிறது
ஒலிகளேதுமற்ற இரவின் கனம்

துயரங்களின் தூரம் குறைந்த என் காலத்தின்மீது
தழுவும் காயங்களில் வழியும் ரத்தத்தை
வழிய விடுகிறேன்।

எனினும்
எனினும்
அகாலத்தின் குரல்களைப் பதிவாக்காமல்
தொலைக்கவேண்டியே இருக்கிறது
இந்த இருட்டென்னும் வேளையை

No comments: