Friday, September 19, 2008

குவிமையத்தின் மீது ஒரு ஒளிக்கற்றை


அதற்குமேல் ஒன்றும் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறாள் அவள்। கூழாங்கற்களை உற்பத்தி செய்து கடலில் கடந்துவிடும் நதியைப் போல எதுவும் தொடர்பில்லாது அவள் செல்கிறாள்।அதற்காக அவளை நதி என்றும் நம்மால் சொல்லிவிட முடியாது। ஏனிந்த தயக்கம்? எதற்காக இந்த துயரம்? வாழ்வின் மீது நாம் கொண்டிருக்கிற அர்த்தங்களின் தன்மைகளைக் கேள்விக்கு உடபடுத்த வேண்டியிருக்கிறது। எனினும் அவளின் கூந்தலைப் போல அவள் வாழக்கை சுருண்டுதான் இருக்கிறது। எவ்வளவு நாட்கள் அவளின் தனிமைத்துயரை வெறும் உடைகள் மூடியிருக்கும்?

No comments: