Sunday, August 10, 2008

தவிப்பு

அண்மையில் வேலூரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. குமரவேல் என்ற விழுப்புர மாவட்டத்து இளைஞனைத்தேடி அவருடைய தாதாவும் அண்ணனும் வந்திருந்தனர். நடுத்தர விவசாய குடும்பம். அந்த இளைஞன் அப்படி யொன்றும் அழகானவனும் இல்லை. வாலிபத்தின் சாயல் ஏதுமற்று அவன் உள்ளத்தின் ஏக்கம் அவனுக்கு தூக்கத்தை தந்திருக்காது.
திருவண்ணாமலையில் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு வேலூரில் உள்ள தனியார் கணிப்பொறி நிறுவனத்தில் படித்துக்கொண்டிருந்தவன் திடீரென்று வீட்டுக்கே வரவில்லை என்பதால் மட்டுமல்ல இந்த தேடல் தன்னுடைய பேரன் அரவாணிகளுடன் சேர்ந்துவிட்டான் என்ற செய்தியும் தான் அவர்களை வேலூருக்கு வரவழைத்தது. வரும்போதே அவர்கள் அவனுக்கு லுங்கியும் வாங்கிவந்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
குமரவேலிடம் பேசினேன். இப்படி ஆதரவாக பேசினாலே போதும் பேருந்து நிலையங்களிலும், தொடர்வண்டிகளிலும் கடைவீதிகளிலும் கைகளைத்தட்டி காசு கேட்கும் அல்லது இருண்ட பிரதேசங்களில் ஆண்களை பாலுறவுக்கு அழைக்கும் அரவாணிகள் உருவாக மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
குமரவேலுக்கு தன்னை ஆணாக உணரும் தருணமே வாய்க்கவில்லை. பெண்கள் மீதே அவனுக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. மாறாக ஆண்களை ஈர்ப்பதிலும் அவர்களோடு இருப்பதிலும் மட்டுமே அவனுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.அதனால்தான் தன் நண்பனுடன் தனி அறை எடுத்து வேலூரில் தங்கியுள்ளான்.
இப்படிப்பட்ட எண்ணம் அவனுக்குத் தோன்றியிருப்பதை அறிந்த அவனுடைய பெற்றோர்கள் குமரவேலுவை புரிந்துக்கொள்ளாமல் அவனைத் துன்புறுத்தியுள்ளனர். அதனால் வெறுப்படைந்த குமரவேல் தன்னைப் புரிந்துக்கொள்ளாதவ்ர்களிடத்திலிருந்து விலகியிருக்க நினைத்து வாய்ப்பும் சூழலும் அமையவே தன்னை அரவாணியாக மாற்றிக் கொண்டு 'அமுதா' வாகி விட்டான்.
அரவாணிகள் உருவாகுவது அவர்களின் தனிப்பட்ட உணர்ச்சி உந்துதலினால் அல்ல மாறாக அவர்கள் மேல் நிகழ்த்தப்படுகிற புறக்கணிப்புகளால். இன்றைய நாகரீக சமுகம் அவர்களை அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள வேண்டும். குடும்பம் அவர்களைத் தங்களில் ஒருவராக நினைக்கவேண்டும். அதை விடுத்து அவர்களை ஒதுக்குவது பாலியியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு அவர்களை துரத்துவது கொடுமை.
அத்தகைய சமுக வன்கொடுமையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முயற்சிகள் செய்யப் படவேண்டும். முதன்முதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரவாணிகளுக்காக அமைப்பினைத் தொடங்கியிருப்பதை பாராட்டவேண்டும்
அரவாணிகளும் வெறும் பாலுணர்ச்சிக்காக மட்டும் வாழபவர்கள் தாம் என்பதை விடுத்து சாதாரண மனிதர்களைப் போல எல்லாவழிகளிலும் நடக்க வேண்டும். விஜய் தொலைக்காட்சியில் வருகின்ற இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சி நல்ல முயற்சி. அரவானிகள் மேல் அது சமுகத்தின் பாரவையினை மாற்றியிருக்கிறது

1 comment:

சுந்தரராஜன் said...

நல்ல முயற்சி.

தமிழ்மணம், தேன்கூடு போன்ற வலைப்பதிவு திரட்டிகளில் தங்கள் வலைப்பூவை பதிவு செய்வதன்மூலம் பரவலான வாசகர்களிடம் சென்றடையலாம்.

வாழ்த்துகளுடன்...,
சுந்தரராஜன்

பி.கு. மறுமொழிப்பெட்டியில் வார்த்தை சரிபார்ப்பு போன்ற தேவையற்ற அம்சங்களை தவிர்க்கலாம்.