Friday, June 26, 2009

இன்னும் முடியாத உங்களின் விவாதங்களை
என்ன செய்யமுடியும் உங்களால்
செவிகள் மறுத்த சொற்கள் மீள்கின்றன
மீண்டும் எங்களிடம்
சொற்களை அனுப்புவதற்குப் பதில்
கணைகளை வீசுகின்றீர்
கணைகள் நேரிடையானவை ஒரு சாதிவெறியனைப் போலெனின்
எங்கள் ஆயுதங்களை பயன்படுத்துவோம்
நட்பை கணைகளாக்கும் உங்கள்
தத்துவம் புரியாமல்
நிற்கிறோம்
எனினும் போர்க்காலம் என்பதை
மேகங்கள் தீர்மானிப்பதில்லை

1 comment:

கோவி.கண்ணன் said...

//எங்கள் ஆயுதங்களை பயன்படுத்துவோம்நட்பை கணைகளாக்கும் உங்கள்தத்துவம் புரியாமல்நிற்கிறோம்எனினும் போர்க்காலம் என்பதைமேகங்கள் தீர்மானிப்பதில்லை//

சிறப்பான வரிகள் !