Sunday, March 15, 2009
என்னுடைய கடந்த பதிவு டிசம்பரில் ஏற்றப்பட்டது. அதற்குப் பிறகு எழுதுவதற்கு நிறைய செய்திகள் கைவசம் இருக்கிறது. ஆனாலும் சொல்லமுடியாத மனத்தடை என்னை ஒருவகையில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு ‘சோம்பேறித்தனம்’ என்று நீங்கள் பெயர் வைப்பீர்களானால் அதை மறுக்க என்னால் முடியாது. இனிமேல் தொடர்ந்து எழுதவேண்டும் என்னும் எண்ணத்துடன் இருக்கிறேன். ‘அய்யா எப்படிங்கய்யா தொடர்ந்து எழுதறது?’ என்று எதேச்சையாக எழுத்தாளர் நாகூர் ரூமியிடம் கேட்டேன். என்னுடைய குரு ஸ்தானத்தில் அவரை வைத்திருக்கிறேன். அவர் மிகவும் சாதரணமாக ஒரு ரொட்டியைக் கிழித்து மீன் மசாலாவில் தொட்டுவிட்டு வாயில் போட்டுக்கொண்டே சொன்னார். ‘உக்கார்ந்து எழுதவேண்டும்’ ரூமியின் எழுத்தில் மட்டுமில்லை அவருடைய பேச்சிலும் இப்படி சாதாரணமாக வந்து விழும் நகைச்சுவை என்னை நிறைய சிந்திக்கவைத்து இருக்கின்றன. அவரின் அடுத்த வினாடி அப்படித்தான் தமிழ்வாசகர்களை சுண்டிவைத்திருக்கிறது. உட்கார்ந்து எழுதுவது என்பதின் ஆழ்ந்த பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன்.
ரூமியின் தொடர்ந்த நூல் வரிசையில் அடுத்து வந்து சேர்ந்திருக்கின்றது value education என்னும் புதிய ஆங்கில நூல். கல்லூரி பாட்திட்டத்தில் மதிப்பீட்டுக்கல்வியைப் பாடமாக வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கு தேவையான பாடப்புத்தகம் எதுவும் இன்னும் சரியாக வரவில்லை. ஒருவேளை பாட்திட்டமே வகுக்கப்படாவில்லையோ என்னவோ தெரிய வில்லை. ஆனால் இந்த புத்தகம் அந்த தேவையை தீர்க்கிறது. அதன் பிரிவுகள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக உள்ளன. இந்த புத்தகம் கதவுகள் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சந்தோஷமாக இருந்தது, நீங்கள் நிறைய எழுதப்போவதை நினைத்து. வருத்தமாக இருக்கிறது, ஒரு மோசமான குரு கிடைத்ததை நினைத்து.
அன்புடன்
நாகூர் ரூமி
நாகூர் ரூமி மட்டுமல்ல
அவரது ஊரின்
அத்தனை உயிர்களும்
இப்படித்தான்
கண்டமேனிக்கு
நகைச்சுவையில் புரளும்.
ஊரின் தீராத சாபமாக இருக்கலாம்.
*
நிஜமாகவே உங்களுக்கு நல்லதோர் குரு கிடைத்திருக்கிறார்.
சீக்கிரம் நீங்கள்
மில்லியனர் ஆவீர்கள்!
- தாஜ்
உன்னுடை வலைப்பூ பார்த்தேன்.
நன்றாக செய்திருக்கிறாய்.
வாழ்த்துக்கள்.
ஆக்ஸ்போர்ட் சரவணன்.
Post a Comment